1.2 லைப் இன் தி யூகே தேர்வை எழுதுதல்

லைப் இன் தி யூகே தேர்வை எழுத இப்புத்தகம் உங்களுக்கு உதவும். யூகேவில் வாழ்க்கையின் முக்கிய அம்சங்களைப் பற்றிய 24 கேள்விகளைக் கொண்டது அத்தேர்வு. கேள்விகள் இப்புத்தகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் கேட்கப்படும். ஒரே நேரத்தில் தேர்வெழுதும் ஒவ்வொருவருக்கும் கேட்கப்படும் 24 கேள்விகளும் வெவ்வேறாக இருக்கும்.

பொதுவாக லைப் இன் தி யூகே தேர்வு ஆங்கிலத்திலேயே எழுதப்படும். இருப்பினும் நீங்கள் வேல்ஸ் அல்லது ஸ்காட்டிஷ் கேலிக்கில் எழுத விரும்பினால் அதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.

இத்தேர்வை ஒரு பதிவுபெற்ற மற்றும் அனுமதிபெற்ற லைப் இன் யூகே தேர்வு மையத்தில் மட்டுமே எழுத முடியும். யூகே முழுவதும் சுமார் 60 தேர்வு மையங்கள் உள்ளன. உங்கள் தேர்வுக்கு நீங்கள் www.lifeintheuktest.gov.uk என்ற இணையதளத்தில் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். வேறு எந்த மையத்திலும் நீங்கள் தேர்வை எழுதக்கூடாது. ஏனெனில் யூகே எல்லை அமைப்பு, பதிவு செயப்பட்ட தேர்வு மையங்கள் அளிக்கும் சான்றிதழ்களை மட்டுமே ஏற்கும். நீங்கள் ஐல் ஆப் மான் அல்லது சேனல் ஐலேண்ட்ஸில் இருந்தால் நீங்கள் இத்தேர்வை எழுதுவதற்கு வேறு ஏற்பாடுகள் உள்ளன.

தேர்வுக்கு முன்பதிவு செய்யும் போது, அறிவுரைகள் கவனமாகப் படிக்கவும். உங்கள் விவரங்களை சரியாக அளிக்கவும். வேறு எந்த மையத்திலும் நீங்கள் தேர்வை எழுதக்கூடாது. ஏனெனில் யூகே எல்லை அமைப்பு, பதிவு செயப்பட்ட தேர்வு மையங்கள் அளிக்கும் சான்றிதழ்களை மட்டுமே ஏற்கும். தேர்வுக்கு நீங்கள் அடையாளம் மற்றும் முகவரிச் சான்றை உங்களோடு எடுத்துச் செல்ல வேண்டும். அவை இல்லாமல் தேர்வெழுத இயலாது.

1.2.1 இந்தப் புத்தகத்தை பயன்படுத்துவது எப்படி

லைப் இன் தி யூகே தேர்வில் நீங்கள் தேர்ச்சியடைய தேவையான அனைத்தும் இந்தப் புத்தகத்தில் உள்ளது. கேள்விகள் முழு புத்தகத்தில் இருந்தும் இருக்கும் – இந்த முன்னுரை உட்பட. எனவே, முழு புத்தகத்தையும் நன்றாகப் படிக்கவும். ESOL ஆரம்ப நிலை 3 அல்லது அதற்கு மேலான நிலை ஆங்கிலத்தை வாசிக்கக் கூடிய அனைவருக்கும் புரியும் வண்ணம் இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.புத்தகத்தின் பின்பகுதியில் இருக்கும் அரும்பத உரையில் உங்களுக்கு உதவக்கூடிய சில முக்கிய வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்கள் உள்ளன.

‘புரிந்துவிட்டதா என்று பாருங்கள்’ எனும் பெட்டிகள் வழிகாட்ட இடம்பெற்றுள்ளன. நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய குறிப்பிட்டவற்றை நீங்கள் கண்டறிய அவை உதவும். அந்தப் பெட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளவையை மட்டும் தெரிந்துகொண்டு இருப்பது தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு போதுமானதாக இருக்காது. புத்தகத்தில் கூறப்பட்டுள்ள அனைத்தும் உங்களுக்கு புரிந்திருக்க வேண்டும். எனவே, தகவல்களை கவனமாகப் படிக்கவும்.

1.2.2 கூடுதல் தகவல்களை எங்கே பெறுவது

கூடுதல் தகவல்களை பின்வரும் இடங்களில் பெறலாம்:

  • விண்ணப்பிக்கும் முறை மற்றும் நீங்கள் நிரப்பவேண்டிய படிவங்களைப் பற்றிய தகவல்களை யூகே எல்லை அமைப்பின் இணையதளத்தில் (www.ukba.homeoffice.gov.uk) பெறலாம்.
  • லைப் இன் தி யூகே தேர்வு இணையதளத்தில் (www.lifeintheuktest.gov.uk) தேர்வைப் பற்றிய கூடுதல் தகவல்களையும் எவ்வாறு முன்பதிவு செய்வது என்பதைப் பற்றியும் காணலாம்.
  • Gov.uk (www.gov.uk) இணையதளத்தில் ESOL வகுப்புகள் பற்றிய தகவல்களையும் உங்கள் பகுதியில் இருக்கும் வகுப்பை கண்டுபிடிப்பது எப்படி என்றும் காணலாம்.

Check that you understand

  • பிரிட்டிஷ் சமுதாயத்தின் அடிப்படையாக அமைந்திருக்கும் மதிப்பீடுகளின் பிறப்பிடம்.
  • பிரிட்டிஷ் வாழ்க்கையின் அடிப்படை கொள்கைகள்
  • நிரந்தர வாசத்துடன் வரும் பொறுப்புகளும் சுதந்திரங்களும்
  • நிரந்தர வாசி அல்லது குடிமகன் ஆவதற்கான நடைமுறை

This study guide is also available in: arArabic beBengali drDari zh-hansChinese (Simplified) enEnglish guGujarati hiHindi neNepali pshPashto plPolish paPunjabi trTurkish urUrdu